எனது பெயர் ரேதுகா முருகுப்பிள்ளை, நான் Aarburg (AG)’ ல் வசித்து வருகின்றேன். 2017 ஆடிமாதம் எனது பட்டபடிப்பை (Logopädin, B.A) பேச்சு- மூச்சுப் பயிற்சியாளராக Interkantonale Hochschule für Heilpädagogik, Zürich’ ல் நிறைவு செய்துள்ளேன்.
நான் தற்போது ஆரம்ப, மேற்பள்ளி மாணவர்களின் (Vor- und Nachschulkinder) பேச்சுப்பயிற்சியாளராக Jordi-Kompetenz’ ல் வேலை செய்து வருகின்றேன். நான் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கும்போது நாளடைவில் அவர்களின் பேச்சுத்திறனின் அதிகரிப்பு என்னை வியக ்க வைப்பதை வார்த்தைகளில் விபரிக்கமுடியாது.